வாழைப்பழப் பொங்கல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 1 கப்
2. வெல்லத்தூள் - 1 கப்
3. நெய் - 3 மேசைக்கரண்டி
4. திராட்சை - 12 எண்ணம்
5. ஏலக்காய்த் தூள் - 1தேக்கரண்டி
6. வாழைப்பழம் - 2 எண்ணம்
7. பால் - 1/2 கப்.
செய்முறை :
1. அரிசியைத் தண்ணீரில் கழுவிச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. வெல்லத்தை கரைத்து வடிகட்டி வைக்கவும்.
3. வாழப்பழங்களைத் தோல் நீக்கிச் சிறிய துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீருடன் பால் சேர்த்துக் கொதிக்க விடவும்.
5. அது கொதித்து வரும் போது அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் அரிசியைச் சேர்த்து மிதமான நெருப்பில் குழைய வேக விடவும்.
6. வெந்து கொண்டிருக்கும் அரிசியுடன் வெல்லக் கரைசலைச் சேர்க்கவும்.
7. அதனுடன் நறுக்கி வைத்திருக்கும் வாழைப்பழத் துண்டுகள், ஏலக்காய்த் தூள் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
8. நெய்யில் வறுத்த முந்திரியையும், திராட்சையையும் சேர்த்து நன்கு கிளறவும்.
9. கடையாக சிறிது நெய் விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.