பூண்டு சாதம்
சுபஸ்ரீஸ்ரீராம்
தேவையான பொருட்கள்:
1. பாசுமதி அரிசி - 200 மில்லி
2. கடலெண்ணை அல்லது சூரியகாந்தி எண்ணை - 3 மேசை கரண்டி
3. பெரிய வெங்காயம் - 1
4. பூண்டு பல் - 16
5. சோயா சாஸ் - 2 மேசை கரண்டி
6. வெங்காயத்தாள் - இரண்டு
7. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் பாசுமதி அரிசியை நன்றாகக்களைந்து, ஒரு பதினைந்து நிமிடம் ஊற வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் 400 மில்லி தண்ணீர் ஊற்றி, அரிசியை நேரடியாக அடுப்பில் வேகவைத்து, முக்கால் பதம் வந்தவுடன் சாதத்தை இறக்கி தண்ணீரை வடித்து விடவும்.
3. வெங்காயம், 10 பூண்டு, வெங்காயத்தாள் இம்மூன்றையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4. மீதமுள்ள ஆறு பூண்டை நைசாக அரைத்துக் கொள்ளவும்.
5. ஒரு கனமான பாத்திரத்தில் எண்ணை ஊற்றவும். நன்றாக சூடானதும் முதலில் வெங்காயத்தை போடவும். பொன்னிறம் வந்தவுடன் அரைத்த பூண்டு விழுதை போடவும். பச்சைவாசனை போக நன்றாக வதக்கவும்.
6. பின்னர் பொடியாக நறுக்கிய பூண்டை அதனுடன் சேர்க்கவும். அது பொன்னிறம் வந்தவுடன் வடித்து வைத்துள்ள சாதத்தை அதனுடன் சேர்த்து நன்றாக கிளறவும்.
7. பத்து நிமிடம் கழித்து சோயா சாஸ் ஊற்றி, அதன் பிறகு உப்பு சேர்க்கவும். பின்னர் இறக்குகிற நேரத்தில் வெங்காயத்தாள் சேர்த்து ஹாட் பேக்கில் வைத்துவிடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.