வெண் பொங்கல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 1 கப்
2. பாசிப்பருப்பு - 1/2 கப்
3. இஞ்சி - 1 துண்டு
4. மிளகு - 1 1/2 தேக்கரண்டி
5. சீரகம் - 1 1/2 தேக்கரண்டி
6. கறிவேப்பிலை - சிறிது
7. எண்ணெய் - 1/4 கப்
8. நெய் - 2 1/2 டேபிள் ஸ்பூன்
9. முந்திரிப்பருப்பு - 8 எண்ணம்
10. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பச்சரிசி மற்றும் பாசிப்பருப்பை தனித்தனியாகப் பொன்னிறமாக வறுத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.
2. பின்னர், அதனை நன்கு கழுவி, இரண்டையும் ஒன்றாக சேர்த்து 5 கப் தண்ணீர் ஊற்றி, உப்பு, 1 தேக்கரண்டி எண்ணெய் சேர்த்து வேக வைத்து, இலேசாக மசித்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், முந்திரிப்பருப்பைப் போட்டு தனியாக வைத்துக் கொள்ளவும்.
4. மிளகு மற்றும் சீரகத்தை ஒன்றிரண்டாக அரைத்துத் தனியாக வைத்துக் கொள்ளவும்.
5. ஒரு வாணலியில் நெய் மற்றும் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், சீரகம், மிளகு சேர்த்துத் தாளித்து, பின் அதில் இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து சிறிது நேரம் வதக்கவும்.
6. பின்பு அத்துடன் மசித்து வைத்துள்ள சாதத்தைச் சேர்த்து நன்கு கிளறி விட்டு, பின் அதில் முந்திரிப்பருப்பைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.