குடைமிளகாய் சாதம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. சாதம் – 2 கப்
2. குடைமிளகாய் – 3 எண்ணம்
3. பெரிய வெங்காயம் – 3 எண்ணம்
4. உளுந்து – 2 தேக்கரண்டி
5. கடலைப்பருப்பு – 2 தேக்கரண்டி
6. மிளகாய் வற்றல் – 4 எண்ணம்
7. எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
8. கடுகு – 1 தேக்கரண்டி
9. உளுந்து – 1 தேக்கரண்டி
10. உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
1. குடை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றை நீள வாக்கில் நறுக்கி வைக்கவும்.
2. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுந்து போட்டுத் தாளிக்கவும்.
3. பின்னர் அதில் பெரிய வெங்காயம் போட்டு வதக்கவும்.
4. அசுத்துக் குடைமிளகாய் போட்டு வதக்கி விடவும்.
5. ஒரு வாணலியில் மிளகாய் வற்றல், உளுந்து, கடலைப்பருப்பை வறுத்து ஆற வைத்துப் பொடித்து வைக்கவும்.
6. சாதத்துடன், வதக்கிய வெங்காயம், குடைமிளகாய் கலவை, உப்பு, பொடித்து வைத்த பொடி போன்றவற்றைச் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.