வெஜிடபிள் பிரியாணி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பாசுமதி அரிசி - 2 கப்
2. பெரிய வெங்காயம் - 2 எண்ணம்
3. தக்காளி - 3 எண்ணம்
4. கேரட் - 1 எண்ணம்
5. உருளைக்கிழங்கு - 1 எண்ணம்
6. பச்சைப் பட்டாணி - 50 கிராம்
7. புதினா - 1 கைப்பிடியளவு
8. மல்லித்தழை - 1 கைப்பிடியளவு
9. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு.
அரைக்க
11. சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
12. இஞ்சி - 1 துண்டு
13. பூண்டு - 6 பல்
14. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
15. மல்லி - 2 தேக்கரண்டி
16. பட்டை - 2 எண்ணம்
17. இலவங்கம் - 2 எண்ணம்
18. ஏலக்காய் - 2 எண்ணம்
19. சீரகம் - 1/2 தேக்கரண்டி
20. தயிர் - 1/2 கப்
21. கசகசா - 1 தேக்கரண்டி
தாளிக்க
22. பிரிஞ்சி இலை - சிறிது
23. நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி
24. நெய் - 2 மேசைக்கரண்டி
செய்முறை :
1. அரிசியைக் கழுவி, அரை மணி நேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.
2. அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒன்றாகச் சேர்த்து அரைத்தெடுக்கவும்.
3. காய்கறிகளை வெஜிடபிள் பிரியாணிக்கு ஏற்ற அளவில் நறுக்கி வைக்கவும்.
4. வெங்காயத்தை நீளவாக்கிலும், தக்காளியை பொடியாகவும் நறுக்கி வைக்கவும்.
5. ஒரு குக்கரில்/ பாத்திரத்தில் எண்ணெய், நெய்யைக் காயவைத்து பிரிஞ்சி இலை, வெங்காயத்தைப் போட்டு நன்கு வதங்கியதும், அத்துடன் பச்சை மிளகாய் மற்றும் அரைத்த விழுதைச் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கவும்.
6. பிறகு, காய்கறிகள், தக்காளி, உப்பு, மஞ்சள்தூள், தயிர், புதினா, மல்லித்தழை ஆகியவற்றைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
7. ஊற வைத்த அரிசியைத் தண்ணீருடன் மேற்கண்ட கலவையில் சேர்த்துக் கிளறி, மூடி போட்டு வேக வைத்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.