குடை மிளகாய் சாதம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. குடை மிளகாய் - 2 எண்ணம்
2. சாதம் -1 1/2 கப்
3. எண்ணெய் - 3 தேக்கரண்டி
வறுத்துப் பொடி செய்ய
4. மிளகாய் வற்றல் - 7 எண்ணம்
5. கடுகு - 1 தேக்கரண்டி
6. சீரகம் - 2 தேக்கரண்டி
7. துவரம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
8. உளுந்தம்பருப்பு - 3 மேசைக்கரண்டி
9. வேர்க்கடலை - 100 கிராம்
10. கருவேப்பிலை - 2 கொத்து.
செய்முறை :
1. வெறும் வாணலியில் சுட வைத்து வறுக்கக் கொடுத்து இருக்கும் பொருள்கள் அனைத்தையும் அதில் போட்டு வறுக்கவும்.
2. வறுத்ததை ஆற வைத்துப் பிறகு பொடி செய்து வைக்கவும்.
3. குடை மிளகாயை நறுக்கி வைக்கவும்.
4. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் நறுக்கிய குடை மிளகாயினைப் போட்டு வதக்கவும்.
5. அத்துடன் பொடி செய்து வைத்து இருப்பதைச் சேர்த்து வதக்கவும்.
6. அனைத்தும் வதக்கியதும் சாதம், உப்பு சேர்த்துக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.