புளிப் பொங்கல்
சுபஸ்ரீஸ்ரீராம்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசிக் குருணை - 300 மில்லி
2. புளி - நெல்லிக்காய் அளவு
3. கடுகு - ஒரு மேசைக்கரண்டி
4. உளுத்தம் பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
5. கடலை பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
6. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
7. வரமிளகாய் - 3 எண்ணம்
8. பெருங்காயம் - ஒரு சிறிய கட்டி
9. கறிவேப்பிலை - 10 இலைகள்
10. நல்லண்ணெய் - 8 பெரிய மேசைக்கரண்டி
11. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு வாணலியில் நல்லண்ணெய் ஊற்றவும். கடுகு,உளுந்து, கடலை பருப்பு, வரமிளகாய், பச்சைமிளகாய் , கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
2. பின்னர் புளியை கெட்டியாக கரைத்து ஊற்றவும். உப்பு சேர்க்கவும்.
3. புளி வாசனை போனவுடன், மேலும் 600 மில்லி தண்ணீர் ஊற்றி பெருங்காயம் சேர்த்து கொதிக்கவிடவும். நன்கு கொதி வந்தவுடன், அரிசி குருணையை போட்டுக் கிளறி கெட்டியானவுடன் குக்கரில் வைத்து ஒரு விசில் வந்தவுடன் அணைக்கவும். சுவையான புளிப்பொங்கல் தயார்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.