வாய்வுக் கஞ்சி
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. அரிசி - 1 கப்
2. பூண்டு - 8 பல்
3. சீரகம் - 2 தேக்கரண்டி
4. வெந்தயம் - 1 தேக்கரண்டி
5. முருங்கை இலை - 1 கப்
6. பால் - ஒரு கப்
7. தேங்காய்ப்பால் - 2 கப்
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. அரிசியை நன்கு கழுவி குக்கரில் சேர்க்கவும்.
2. இத்துடன் உரித்த பூண்டு, சீரகம், வெந்தயம் சேர்க்கவும்.
3. பிறகு நன்கு கழுவிய முருங்கை இலை, 3 கப் தண்ணீர், ஒரு கப் காய்ச்சிய பால் விட்டு, குக்கரை மூடவும்.
4. அடுப்பில் மிதமான தீயில் 12 நிமிடம் வைத்துக் குழைய வேகவிடவும்.
5. குக்கரைச் சிறிது நேரம் கழித்துத் திறந்து, தேங்காய்ப்பால், தேவையான உப்பு சேர்த்து ஓரிரு நிமிடங்கள் கொதிக்க விடவும்.
6. பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி சூடாகப் பரிமாறவும்.
குறிப்பு: இக்கஞ்சிக்குத் துவையல் தொட்டுக் கொள்ள ருசியாக இருக்கும்..
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.