ஆந்திர சர்க்கரைப் பொங்கல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 1 கப்
2. பாசிப்பருப்பு - 1/4 கப்
3. சர்க்கரை - 1 கப்
4. ஏலக்காய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
5. நெய் - 4 தேக்கரண்டி
6. குங்குமப்பூ - 1 சிட்டிகை
7. கேசரி கலர் - 1 சிட்டிகை
8. தேங்காய் (பல்லாக நறுக்கியது) - 2 தேக்கரண்டி
9. முந்திரிப்பருப்பு - 2 தேக்கரண்டி
10. கிஸ்மிஸ் பழம் - 8 எண்ணம்
செய்முறை :
1. அரிசி, பருப்பை தனித்தனியே உதிராக வேக வைத்துக் கொள்ளவும்.
2. சர்க்கரையுடன் கால் கப் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைக்கவும். அது கொதித்து, சற்று கெட்டியானதும் சாதம், பருப்பு, நெய், ஏலக்காய்த்தூள், கேசரி கலர், குங்குமப்பூ சேர்த்துக் கிளறி இறக்கவும்.
3. ஒரு வாணலியில் நெய் ஊற்றிக் காய்ந்ததும், முந்திரிப்பருப்பு, தேங்காய்ப் பற்கள், கிஸ்மிஸ் போட்டு வறுத்து சேர்த்துக் கிளறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.