ஹைதராபாத் வெஜ் பிரியாணி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. உருளைக்கிழங்கு - 1 எண்ணம்
2. சேனைக்கிழங்கு - 6 துண்டு (நீளவாக்கில்)
3. சேப்பங்கிழங்கு - 1 எண்ணம்
4. காலிஃப்ளவர் - சிறிது
5. பிரக்கோலி - சிறிது
6. பீன்ஸ் - 5 எண்ணம்
7. பலாக்காய் - 4 சிறிய துண்டுகள்
8. சோயா - 6 எண்ணம்
9. மிளகுத் தூள் - 1/2 தேக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு
மசாலா தயாரிப்பு
11. தயிர் - 100 மி.லி
12. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
13. சீரகத்தூள் - 1 தேக்கரண்டி
14. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
15. சீரகம் - 1/2 தேக்கரண்டி
16. புதினா - சிறிது
17. மல்லித்தழை - 2 மேசைக்கரண்டி (பொடியாக நறுக்கியது)
18. பச்சைமிளகாய் - 3 எண்ணம்
19. பட்டை - 1 துண்டு
20. கிராம்பு - 2 எண்ணம்
21. ஏலம் - 1 எண்ணம்
22. ஜாதிக்காய் பொடி - 1 சிட்டிகை
23. ஜாதிபத்திரி பொடி - 1 சிட்டிகை
24. பிரிஞ்சி இலை - 1 எண்ணம்
25. பெரிய ஏலக்காய் - 1 எண்ணம்
அரிசி வேக வைக்க
26. பாசுமதி அரிசி - 300 கிராம்
27. பட்டை (சிறியது) - 1 எண்ணம்
28. கிராம்பு - 1 எண்ணம்
29. ஏலம் - 1 எண்ணம்
30. எலுமிச்சைச் சாறு - 1 தேக்கரண்டி
31. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
32. நெய் - 2 மேசைக்கரண்டி
33. வெங்காயம் - 3 எண்ணம்.
செய்முறை :
1. பாசுமதி அரிசியைக் களைந்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
2. எண்ணெயில் வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி வதக்கி வைத்துக் கொள்ளவும்.
3. காய்கறி வகைகளை நறுக்கிக் கழுவிச் சிறிது நெய்யில் உப்பு, மிளகுத் தூள் சேர்த்து வதக்கி எடுத்து வைக்கவும்.
4. வதக்கிய காய்கறியில், கொடுத்துள்ள அனைத்து மசாலா வகைகளையும் சேர்த்து 20 நிமிடம் ஊற வைக்கவும்.
5. ஒரு வாயகன்ற பாத்திரத்தில் தண்ணீரைக் கொதிக்க விட்டு அதில் களைந்து வைத்த அரிசி, ஏலம், கிராம்பு, பிரிஞ்சி இலை சேர்த்து முக்கால் வேக்காடு வேகவைக்கவும்.
6. பின்னர் அதில் சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கி விட்டு வடிக்கவும்.
7. மற்றொரு கடாயில் சிறிது நெய், எண்ணெய் விட்டு வதக்கிய காய்கறிகளைப் பரவலாக வைத்து அதன் மேல் வடித்த அரிசியை தட்டவும்.
8. அதனுடன் வறுத்த வெங்காயம், மல்லித்தழை, புதினா , ரெட் கலர் பொடி, சிறிது எலுமிச்சைச் சாறு சேர்த்துக் கலக்கித் தெளித்து மூடி போட்டு சிறு நெருப்பில் வைத்து 40 நிமிடம் தம் போடவும்.
9. பின்னர் பிரியாணியை எடுத்துப் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.