நெய் சாதம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பாசுமதி அரிசி - 200 கிராம்
2. நெய் - 100 கிராம்
3. பிரியாணி இலை - 1 எண்ணம்
4. பட்டை - 6 துண்டுகள் (சிறியது)
5. கிராம்பு - 6 எண்ணம்
7. ஏலக்காய் - 2 எண்ணம்
8. பூண்டு - 7 பல்
9. முந்திரிப்பருப்பு - 10 எண்ணம்
10. கறிவேப்பிலை - சிறிது
11. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. அரிசியை சில நிமிடங்கள் ஊற வைத்துக் கழுவி வடித்து கொள்ளவும்.
2. பூண்டைத் தோலுரித்துத் தட்டிக் கொள்ளவும்.
3. ஏலக்காயை லேசாக தட்டிக் கொள்ளவும்.
4. அடுப்பில் வாணலியை வைத்து நெய் ஊற்றிக் காய்ந்ததும் , ஏலக்காய், பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு சேர்த்து வதக்கவும்.
5. வடிகட்டிய அரிசியை அடுப்பில் உள்ள நெய்யில் போட்டுக் கிளறவும்.
6. இதனுடன் ஒரு பங்கு அரிசிக்கு 2 1/4 பங்கு சுடு தண்ணீர் சேர்க்கவும்.
7. தேவையான அளவு உப்பு சேர்த்து, அதிகம் கிளறாமல் மெல்லிய தணலில் வேகவிடவும்.
8. சாதம் குழையும் முன் இறக்கி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.