வெஜிடபிள் வரகுப் பிரியாணி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. வரகு அரிசி – 150 கிராம்
2. கேரட் - 100 கிராம்
3. பட்டர் பீன்ஸ் – 100 கிராம்
4. பீட்ரூட் – 50 கிராம்
5. தக்காளி – 2 எண்ணம்
6. வெங்காயம் – 100 கிராம்
7. பச்சை மிளகாய் – 1 எண்ணம்
8. மஞ்சள் தூள் – 1 சிட்டிகை
9. மிளகாய் தூள் – 1/2 தேக்கரண்டி
10. பட்டை – 1 துண்டு
11. கிராம்பு – 3 எண்ணம்
12. பிரியாணி இலை – 2 எண்ணம்
13. கல்பாசி - 1 தேக்கரண்டி
14. இஞ்சி, பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
15. பிரியாணி மசாலாப் பொடி – 1 தேக்கரண்டி
16. நல்லெண்ணெய் – தேவையான அளவு
17. மல்லித்தழை – சிறிது
18. புதினா இலை - சிறிது
செய்முறை :
1. வரகு அரிசியை சுமார் 30 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
2. காய்கறிகள் அனைத்தையும் தனித்தனியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3. மல்லித்தழை, புதினா ஆகியவற்றைக் கழுவிப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் எண்ணை ஊற்றிக் காய்ந்ததும் அதில், பட்டை, கிராம்பு, பிரியாணி இலை மற்றும் கல்பாசி போட்டு வதக்கவும்.
5. அதனுடன் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்துப் பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
6. வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
7. பின் அதில் தக்காளி, மல்லித்தழை, புதினா சேர்த்து வதக்கவும்.
8. அத்துடன் மஞ்சள் தூள், மிளகாய் தூள், முழு பச்சை மிளகாய் போட்டு அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.
9. தக்காளி நன்கு வதங்கியதும் அனைத்துக் காய்கறிகளையும் போட்டுச் சில நிமிடங்கள் வதக்கவும்.
10. பிறகு அதில் பிரியாணி மசாலாப் பொடி சேர்த்துக் கலக்கவும்.
11. கடைசியாகச் சிறிதளவு தண்ணீர் ஊற்றிக் காய்கறியை மூடி வைத்து வேகவிடவும்.
12. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அது கொதிநிலைக்கு வந்தவுடன், வரகு அரிசியைப் போடவும்.
13. பின்னர் வாணலியில் உள்ள கலவை அனைத்தையும் வரகு அரிசிப் பாத்திரத்தில் சேர்த்து வேக வைக்கவும்.
14. சாதம் நன்றாக வெந்த பின்பு, அதை ஒரு அகலமான தட்டில் கொட்டிப் பரப்பி விடவும்.
15. சில நிமிடங்களுக்குப் பிறகு பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.