புளியோதரை
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மிளகு - 20 கிராம்
2. தனியா - 20 கிராம்
3. கடலைப் பருப்பு - 25 கிராம்
4. எள் - 25 கிராம்
5. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
6. பெருங்காயம் - சிறிது
7. வெந்தயம் - சிறிது
8. புளி - 50 கிராம்
9. உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
1. வேர்க்கடலை - 50 கிராம்
2. நல்லண்ணெய் - 100 மி.லி.
3. கடுகு - 2 தேக்கரண்டி
4. கருவேல்லிலை - தேவையான அளவு
செய்முறை:
புளிக்காய்ச்சல் செய்முறை
1. புளியைத் தண்ணீரில் ஊற வைத்துப் பின்னர் சிறிது உப்பு சேர்த்துக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
2. மிளகு, தனியா, கடலைப் பருப்பு, வெந்தயம், எள், மிளகாய் வற்றல் மற்றும் பெருங்காயத்தைத் தூளாக்கிக் கொள்ள வேண்டும்.
3. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்கத் தேவையான அனைத்தும் சேர்த்து தாளிக்க வேண்டும்.
4. பின்னர் அதில் கரைத்து வைத்த புளிக் கரைசலை ஊற்றி, தூளாக்கி வைத்த பொடிகள் அனைத்தையும் சேர்த்துக் கொதிக்க விட வேண்டும்.
3. நன்கு கொதித்து எண்ணெய் பிரிந்த பின்பு இறக்கி வைக்கவும்.
புளிச்சாதம் செய்முறை
1. சாதத்தை நல்லெண்ணெய் விட்டுக் கிளற வேண்டும்.
2. தயார் செய்து வைத்துள்ள புளிக்காய்ச்சலை சாதத்தில் ஊற்றிக் கிளற வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.