காய்கறி சாதம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. சாதம் - 2 கப்
2. கேரட் - 1 எண்ணம்
3. பீன்ஸ் - 50 கிராம்
4. குடை மிளகாய் - 1 எண்ணம்
5. முட்டைக்கோஸ் - 100 கிராம்
6. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
7. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
8. இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
9. பட்டை (சிறியது) - 2 துண்டு
10. கிராம்பு - 3 எண்ணம்
11. பிரியாணி இலை - 1 எண்ணம்
12. ஏலக்காய் - 1 எண்ணம்
13. தக்காளி சாஸ் - 2 தேக்கரண்டி
14. நெய் - 2 தேக்கரண்டி
15. மிளகு - 1/4 தேக்கரண்டி
16. சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
17. உப்பு - தேவையான அளவு
18. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
1. சாதத்தை கொஞ்சம் விறைப்பாக வடித்து ஆற வைக்கவும்.
2. கேரட், பீன்ஸ், முட்டைக்கோஸ், குட மிளகாய், பெரிய வெங்காயம் ஆகியவற்றைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரியாணி இலை ஆகியவற்றைப் போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
4. பிறகு நறுக்கிய பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனைப் போகும் வரை வதக்கவும்.
5. பிறகு நறுக்கிய காய்கறிகளைப் போட்டு சிறு நெருப்பில் நன்றாக வதக்கவும்.
6. அதனுடன் சிறிது சர்க்கரை, தேவையான அளவு உப்பு சேர்த்து மூடி போட்டு வைத்து வேக விடவும். இடையில் அவ்வப்போது கிளறி விடவும்.
7. அதன் பிறகு அதில் தக்காளி சாஸ் சேர்த்து வதக்கவும்.
8. பின்னர் அதில் ஆறிய சாதத்தைப் போட்டுக் குழையாமல் கிளற வேண்டும்.
9. இதனுடன் மிளகு தூளைச் சேர்த்துக் கிளறி, சிறிது நேரம் சிறு நெருப்பில் வைத்துப் பிறகு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.