திணை வெண்பொங்கல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. திணை அரிசி - 200 கிராம்
2. முளை விட்ட பாசிப்பயறு – 50 கிராம்
3. சீரகம் – 1/2 தேக்கரண்டி
4. மிளகு – 1/4 தேக்கரண்டி
5. பெரிய வெங்காயம் – 1 எண்ணம்
6. பச்சை மிளகாய் – 1 எண்ணம்
7. இஞ்சி – 1 சிறு துண்டு
8. மஞ்சள் தூள் - 1/2 சிட்டிகை
9. உப்பு – தேவையான அளவு
10. கறிவேப்பிலை – சிறிது
செய்முறை :
1. திணை அரிசியை அரை மணி நேர தண்ணீரில் ஊற வைத்துக் கழுவி வைக்கவும்.
2. ஒரு குக்கரில் அரிசியைப் போட்டு, அதனுடன் மேலேக் குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் போட்டு, 31/2 கப் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு, ஒரு விசில் வரும் வரை வேக விடவும்.
3. ஒரு விசில் வந்ததும் தீயைக் குறைத்துச் சிறிது நேரம் ஆவி செல்லும் வரை வைத்திருக்கவும்.
4. பின்னர் குக்கரிலிருந்து சாதத்தை எடுத்து வாயகன்ற பாத்திரத்தில் போட்டு உதிரியாகக் கிளறிப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.