தக்காளி முட்டைச் சாதம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பாசுமதி அரிசிச் சாதம் - 3 கப்
2. தக்காளி - 2 எண்ணம்
3. வெங்காயத்தாள் - 4 எண்ணம்
4. முட்டை - 4 எண்ணம்
5. பூண்டு - 5 பற்கள்
6. மிளகுத்தூள் - 1/2 தேக்கரண்டி
7. சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
8. சோள மாவு - 2 மேசைக்கரண்டி
9. வினிகர் - 4 மேசைக்கரண்டி
10. மல்லித்தழை - சிறிது
11. உப்பு - தேவையான அளவு
12. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
1. முட்டையை வேக வைத்து நீளவாக்கில் நான்காகக் கீறி வைத்துக் கொள்ளவும்.
2. தக்காளி, வெங்காயத்தூள், பூண்டு ஆகியவற்றைச் சிறியதாக நறுக்கி வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், பூண்டு சேர்த்துப் பொன்னிறமாக வதக்க வேண்டும்.
4. அதில் நறுக்கி வைத்த வெங்காயத்தாள், தக்காளி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
5. அடுத்து சாதம், உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
6. சிறிது நேரம் கழித்து, அதில் உப்பு, சோயா சாஸ் மற்றும் மிளகுத்தூள் போட்டுக் கிளறி விட வேண்டும்.
7. பின் அதில் முட்டைத் துண்டுகளைச் சேர்த்துப் பிரட்ட வேண்டும்.
8. அதே வேளையில், சோள மாவைச் சிறிது நீர் மற்றும் வினிகரில் கலந்து கொண்டு, அதனையும் சாதத்துடன் சேர்த்துச் சிறிது நேரம் கிளறி இறக்க வேண்டும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.