சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பாசுமதி அரிசி சாதம் - 4 கப்
2. கேரட்- 6 எண்ணம்
3. வறுத்த, தோல் நீக்கிய நிலக்கடலைப் பருப்பு - 3 தேக்கரண்டி
4. உப்பு- தேவையான அளவு
வறுத்துத் திரிக்க:
5. உளுத்தம்பருப்பு- 2 தேக்கரண்டி
6. கடலைப்பருப்பு- 1/2 தேக்கரண்டி
7. மிளகு- 1/2 தேக்கரண்டி
8. சீரகம்- 1/2 தேக்கரண்டி
9. கறிவேப்பிலை- 10 இலைகள்
10. மிளகாய்வற்றல்- 5 எண்ணம்
தாளிக்க:
11. நல்லெண்ணெய்- 1 தேக்கரண்டி
12. கடுகு- 1 தேக்கரண்டி
13. கடலைப்பருப்பு- 1 தேக்கரண்டி
14. வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 தேக்கரண்டி
15. பெருங்காயம்- 1/2 தேக்கரண்டி
16. கறிவேப்பிலை- சிறிது
17. மல்லித்தழை - சிறிது
செய்முறை :
1. பாசுமதி அரிசிச் சாதத்தை உதிர் உதிராக வாயகன்ற பாத்திரத்தில் ஆற வைத்துக் கொள்ளவும்.
2. கேரட்டைச் சுத்தம் செய்து, அதன் தோலை மேலாகச் சீவித் துருவி வைத்துக் கொள்ளவும்.
3. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், தாளிசப் பொருட்களைப் போட்டுத் தாளிக்கவும்.
4. அதனுடன் துருவிய கேரட்டை உப்பு சேர்த்து வதக்கவும்.
5. இன்னொரு வாணலியில் வறுக்கக் கொடுத்தப் பொருட்களைப் போட்டு வறுக்கவும். சீரகத்தை மட்டும் கடைசியில் சேர்க்கவும்.
6. வறுத்த பொருட்களை ஆற வைத்துத் திரித்து எடுக்கவும்.
7. கேரட் வெந்ததும் இந்தப் பொடியைச் சேர்த்து, தனியே வறுத்து வைத்திருக்கும் நிலக்கடலையையும் சேர்த்துக் கிளறவும்.
8. கேரட் கலவையைச் சிறிது ஆற விடவும், பின் ஆற வைத்திருக்கும் சாதத்துடன் சேர்த்துக் கிளறி மல்லித்தழையினை மேலாகத் தூவிப் பரிமாறவும்.
குறிப்பு: இச்சாதத்திற்கு வடகம், அப்பளம், வறுவல் வகைகளைத் துணை உணவாகப் பயன்படுத்திச் சாப்பிடலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.