தேங்காய் சாதம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. அரிசி - 150 கிராம்
2. தேங்காய்த் துருவல் - 100 கிராம்
3. உப்பு - தேவையான அளவு
தாளிக்க
4. எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
5. கடுகு - 1/2 தேக்கரண்டி
6. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
7. கடலைப் பருப்பு - 1 தேக்கரண்டி
8. முந்திரிப் பருப்பு - 6 எண்ணம்
9. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
10. பெருங்காயத்தூள் - 1/2 தேக்கரண்டி
11. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை :
1. முதலில் அரிசியைக் களைந்து உப்பு மற்றும் 300 மில்லி தண்ணீர் சேர்த்துக் குக்கரில் அரை மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
2. அதன் பிறகு அதை வேக வைத்து, சாதத்தைத் தட்டில் பரப்பி சில நிமிடங்கள் ஆற விடவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் அதில் மிளகாய் வத்தல், கடுகு, உளுந்தம் பருப்பு, கடலைப் பருப்பு போட்டு தாளிக்கவும்.
4. கடுகு வெடித்தவுடன் காயத்தூள், கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு, தேங்காய் துருவல் சேர்த்து வறுக்கவும்.
5. தேங்காய் துருவல் சிவந்து வரும் போது சாதத்தை போட்டு நன்றாகக் கிளறி அடுப்பிலிருந்து இறக்கி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.