கோவைக்காய் சாதம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. சாதம் - 1 கப்
2. கோவைக்காய் - 100 கிராம்
3. வெங்காயம் - 1 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
5. பூண்டு - 6 பல்
6. கடுகு - 1/4 தேக்கரண்டி
7. சீரகம் - 1 தேக்கரண்டி
8. புதினா - சிறிது
9. நெய் - சிறிது
10. உப்பு - தேவையான அளவு.
செய்முறை :
1. கோவைக்காயை வட்டமாக நறுக்கிக் கொள்ளவும்.
2. கடாயில், நெய் விட்டுக் கடுகு சேர்த்துத் தாளிக்கவும்.
3. பின்னர் அதில் சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
4. அதனுடன் புதினா, நசுக்கிய பூண்டு, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்து வதக்கவும்.
5. அது வதங்கியதும், நறுக்கி வைத்திருக்கும் கோவைக்காய் சேர்த்து வதக்கி இறக்கவும்.
6. இந்தக் கலவையில் சாதம் சேர்த்துக் கலந்து பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.