வெள்ளரிக்காய் கிச்சடி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
2. பாசிப்பருப்பு – 1/2 கப்
3. வெள்ளரிக்காய் துண்டுகள் – 1 கப்
4. முந்திரிப்பருப்பு – 1/4 கப்
5. பச்சைப்பட்டாணி – 1/2 கப்
6. மஞ்சள்தூள் – 1/2 தேக்கரண்டி
7. சீரகத்தூள் – 2 தேக்கரண்டி
8. கரம் மசாலாத் தூள் – 1/2 தேக்கரண்டி
9. லவங்கம் - 2 எண்ணம்
10. பட்டை - சிறு துண்டு
11. பிரியாணி இலை – 2 எண்ணம்
12. இஞ்சி பூண்டு விழுது – 1 தேக்கரண்டி
13. பச்சைமிளகாய் – 4 எண்ணம்
14. நெய் – 1 தேக்கரண்டி
15. தேங்காய்த்துருவல் - 2 தேக்கரண்டி
16. மல்லித்தழை - சிறிது
17. எண்ணெய் - தேவையான அளவு
18. உப்பு – தேவையான அளவு.
செய்முறை :
1. வாணலியில் நெய் விட்டு முந்திரிப்பருப்பை வறுத்தெடுக்கவும்.
2. அதே வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு வெள்ளரிக்காய், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கித் தனியே எடுத்து வைக்கவும்.
3. அரிசி, பருப்பை களைந்து அத்துடன் மஞ்சள்தூள், உப்பு, சீரகத்தூள், கரம்மசாலா சேர்த்து கலந்து வைக்கவும்.
4. வாணலியில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, பட்டை, லவங்கம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
5. அதில் அரிசி கலவையைக் கொட்டி, நன்றாகக் கிளறி விட்டு தண்ணீரை ஊற்றவும்.
6. கீறிய பச்சை மிளகாய், பச்சைப்பட்டாணி சேர்த்து மூடி வேகவைக்கவும்.
7. நீர் பாதியாக வற்றியதும் வெள்ளரிக்காய், முந்திரிப்பருப்பைக் கலந்து வேகவிடவும்.
8. கிச்சடி வெந்ததும் மல்லித்தழை, தேங்காய்த்துருவல் தூவிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.