குதிரைவாலி தயிர் சாதம்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. குதிரைவாலி அரிசி - 2 கப்
2. தயிர் - 1 கப்
3. பால் - 2 கப்
4. கடுகு - 1 தேக்கரண்டி
5. உளுந்தம் பருப்பு - 1 தேக்கரண்டி
6. பெருங்காயம் - 1/2 தேக்கரண்டி
7. பச்சை மிளகாய் (பொடியாக நறுக்கியது) - 3 தேக்கரண்டி
8. இஞ்சி (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
9. கறிவேப்பிலை - சிறிதளவு
10. மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - சிறிதளவு
11. உப்பு - தேவையான அளவு
12. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை :
1. குதிரைவாலி அரிசியை நன்றாகக் கழுவி அரை மணி நேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
2. ஊறிய அரிசியை நன்றாகக் கழுவிக் குக்கரில் போட்டு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி மூன்று விசில் விட்டு வேக வைக்க வேண்டும்.
3. பின்னர் வேக வைத்த சாதத்தில் தயிர், பால், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாகக் கிளற வேண்டும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு சேர்த்துட் தாளித்து, அதனுடன் பெருங்காயம், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்துக் கிளறி வைத்த சாதத்துடன் சேர்த்துப் பரிமாறலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.