வரகரிசி மோர் கஞ்சி
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. வரகரிசி - 1 கப்
2. ஓமம் - 2 தேக்கரண்டி
3. மோர் - 2 கப்
4. பச்சை மிளகாய் - 4 எண்ணம்
5. மாங்காய் - 200 கிராம் (நறுக்கியது)
6. கேரட் - 200 கிராம் (நறுக்கியது)
7. பெரிய வெங்காயம் - 3 எண்ணம்
8. உப்பு - தேவையான அளவு
9. எண்ணெய் - தேவையான அளவு
10. பெருங்காயத்தூள் - 1 சிட்டிகை
செய்முறை :
1. பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
2. வரகரிசியை சுத்தம் செய்து, சிறிது ஓமம், தேவையான அளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் வைத்து வேகவைக்க வேண்டும்.
3. வேக வைத்த வரகரிசிக் கலவையை நன்றாகக் கடைந்து கொள்ளவும்.
4. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றிச் சூடானதும் ஓமம், பச்சை மிளகாய், நறுக்கிய மாங்காய், நறுக்கிய கேரட், நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து நன்றாக வதக்கித் தனியாக வைக்கவும்.
5. ஒரு பாத்திரத்தில் வேக வைத்த வரகரிசி கஞ்சி, வதக்கிய வெங்காய கலவை மற்றும் மோர் சேர்த்து நன்றாகக் கிளறி, சிறிதளவு உப்பு, பெருங்காயத்தூள் தூவி பருகக் கொடுக்கலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.