கல்கண்டு பொங்கல்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 350 கிராம்
2. பால் - 200 மி.லி.
3. கல்கண்டு -600 கிராம்
4. ஏலக்காய்த்தூள் – சிறிதளவு
5. வறுத்த முந்திரி – 15 எண்ணம்
6. நெய்- 75 மி.லி
செய்முறை :
1. அரிசியுடன் பால் மற்றும் தண்ணீர் கலந்து குக்கரில் வைக்கவும்.
2. கொதி வந்ததும் குக்கரை மூடி வெயிட் போட்டு, அடுப்பைக் குறைத்துப் பத்து நிமிடத்தில் இறக்கவும்.
3. இதனுடன் கல்கண்டு, வறுத்த முந்திரி, ஏலக்காய்த்தூள், குங்குமப்பூ சேர்த்து மீதியுள்ள நெய்யை ஊற்றி இறக்கினால் சூடான சுவையான கல்கண்டு பொங்கல் ரெடி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.