பால் கஞ்சி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பொன்னி அரிசி - 1 கிண்ணம்
2. பூண்டு - 15 பற்கள்
3. வெந்தயம் - 1 1/2 தேக்கரண்டி
4. சுக்கு - 1 சிறிய துண்டு
5. பசும்பால் - 150 மி.லி.
6. உப்பு - தேவைக்கேற்ப
செய்முறை :
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றிக் கொதிக்க வைக்கவும், கொதி வந்தவுடன் அரிசியைப் போட்டு வேக விடவும்.
2. உறித்த பூண்டு, வெந்தயம், பொடி செய்த சுக்கு மற்றும் தேவையான உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
3. சாதம் குழைந்து வரும் வேளையில்,காய்ச்சிய பாலை ஊற்றி இறக்கி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.