கம்பங்கூழ்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கம்பு – 1 ஆழாக்கு
2. உப்பு – 1 தேக்கரண்டி
தண்ணீர்- தேவைக்கேற்ப.
செய்முறை :
1. கம்பை நன்கு களைந்து, சிறிது தண்ணீர் சேர்த்து ஒன்றிரண்டாக அரைக்கவும்.
2. கம்பில் உள்ள உமியை அகற்ற, மீண்டும் சிறிது தண்ணீர்விட்டு நன்கு களைந்து வடிகட்டியால் வடிகட்டவும்.
3. பட்டியே இரண்டு அல்லது மூன்று முறை செய்ய உமி நீங்கிவிடும்.
4. களைந்த தண்ணீரைக் கீழே ஊற்றாமல், கம்பைக் காய்ச்சப் பயன்படுத்தக் கெட்டியான கம்மங்கஞ்சி கிடைக்கும்.
5. அடுப்பில் அடி கனமான பாத்திரம் வைத்து களைந்த தண்ணீரைச் சிறிது ஊற்றி, அதில் தேவைக்கேற்ப உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும்.
6. அரைத்த கம்பை அதனுடன் சேர்த்துக் கிளறவும், நன்கு கெட்டியாக பொங்கல் போன்று வந்த பின் இறக்கவும்.
7. ஆறிய பின் தயிர் கலந்து சாப்பிட நன்றாக இருக்கும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.