1. சீரகச் சம்பா குருணை - 1/4 கிலோ
2. பாசிப்பருப்பு - 50 கிராம்
3. இஞ்சி - 1 துண்டு (சிறியது)
4. பூண்டு - 4 பற்கள் (சிறியது)
5. மல்லித்தழை - சிறிது
6. புதினா - சிறிது
7. சீரகம் - 1/2 தேக்கரண்டி
8. வெந்தயம் - 1/2 தேக்கரண்டி
9. சின்ன வெங்காயம் -150 கிராம்
10. பட்டை - சிறிது
11. ஏலக்காய் - 2 எண்ணம்
12. கிராம்பு - 2 எண்ணம்
13. நெய் - சிறிது
14. எண்ணெய் - சிறிது
15. சோம்பு (பொடித்தது) -1/4 தேக்கரண்டி
16. தேங்காய்த் துருவல் - சிறிது
17. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
1. குக்கர் அல்லது டபராவில் எண்ணை ஊற்றிப் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு வெடித்ததும் வெந்தயம், சீரகம் போட வேண்டும்.
2. அத்துடன் சின்ன வெங்காயத்தை அரத்துது, அதனுடன் இஞ்சி, பூண்டு, தக்காளி, பச்சை மிளகாய் போட்டு எண்ணெய் மேலே வரும் வரை வதக்கி விடவும்.
3. அதில் மல்லித்தழை, புதினா போட்டு வதக்கி மூடி விடவும்.
4. அத்துடன் தண்ணீர் சேர்த்து நன்றாகக் கொதித்ததும் ஊற வைத்த அரிசியைப் போட்டுக் கொதிக்க விடவும்.
5. அரிசி வெந்ததும் நெய், சோம்பு, தேங்காய் சேர்த்துச் சிறு நெருப்பில் வேகவிடவும்
குறிப்பு: ஆட்டுக்கறி சேர்த்த கஞ்சி வேண்டுமென்றால் ஆட்டுக்கறி (சிறிதாக நறுக்கியது) 150 கிராம் அளவை வதக்கும் போதே சேர்த்து நன்றாக வதக்கிவிட வேண்டும்.<./div>
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.