தேங்காய் சாதம்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வடித்த சாதம் - 2 கோப்பை
2. தேங்காய் துருவல் – 1 கோப்பை
3. உப்பு - 1/2 தேக்கரண்டி
தாளிக்க:
4. எண்ணெய் - 2 மேசைக்கரண்டி
5. கடுகு -1/2 தேக்கரண்டி
6. உளுத்தம் பருப்பு -1/2 தேக்கரண்டி
7. கடலை பருப்பு -1/2 தேக்கரண்டி
8. வேர்க்கடலை- 1 தேக்கரண்டி
9. முந்திரிப் பருப்பு- 2 தேக்கரண்டி
10. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
11. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை :
1. வடித்த சாதத்தை ஆறவைக்கவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, மிளகாய் வற்றல் போட்டுத் தாளிதம் செய்யவும்.
3. முதலில் வேர்க்கடலை, பிறகு, கடலைப்பருப்பு, முந்திரி, உளுத்தம்பருப்பு, என ஒன்றொன்றாகச் சேர்த்து வறுக்கவும்.
4. பிறகு கறிவேப்பிலை, தேங்காய், மற்றும் உப்பு சேர்த்து மிதமான தீயில் 2 நிமிடம் வதக்கவும். (தேங்காய் சேர்த்து அதிக நேரம் வதக்கக்கூடாது)
5. பின்பு அதில் வடித்த சாதம் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.