ஆடிக்கூழ்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. கேழ்வரகு மாவு - 1 கப் (பாதிக் கேழ்வரகு மாவு, பாதிக் கம்பு மாவு எனக் கலந்தும் செய்யலாம்)
2. பச்சரிசி நொய் (உடைத்த அரிசி) - 1/2 கப்
3. சாம்பார் வெங்காயம் - 10 எண்ணம்
4. பச்சைமிளகாய் - 4 எண்ணம்
5. தயிர் - 100 மி.லி
6. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. கேழ்வரகு மாவை முதல் நாள் இரவேத் தனியாகத் தண்ணீரில் கரைத்து மூடி வைக்கவும்.
2. மறுநாள் காலை அடுப்பில் தண்ணீர்விட்டு ஒரு பானையில் அல்லது பாத்திரத்தில் நொய்யை வேக விட்டு அது பாதி வெந்ததும், இரவு கரைத்து வைத்த மாவைச் சேர்த்து கைவிடாமல் கூழாகக் காய்ச்சவும்.
3. கூழ் வெந்ததும் இறக்கி ஆறவைத்து, அதில் தேவையான உப்பை சேர்க்கவும்.
4. அதன் பிறகு மோர், வெங்காயம், பச்சைமிளகாய் சேர்த்துக் கரைத்துக் கொள்ளலாம்.
குறிப்பு: இக்கூழ் பெரும்பான்மையாக ஆடி மாதத்தில் செய்து அம்மனுக்குப் படைக்கப்படுகிறது.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.