1. பாஸ்மதி அரிசி - 2 கப்
2. வெங்காயம் - 2 எண்ணம்
3. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
4. பச்சைப் பட்டாணி - 3 மேசைக்கரண்டி
5. கேரட் (சிறியது) - 1 எண்ணம்
6. உப்பு - தேவையான அளவு
7. புதினா (பொடியாக நறுக்கியது) - சிறிது
8. மல்லித்தழை (பொடியாக நறுக்கியது) - சிறிது
தாளிக்க
9. நெய் - 4 மேசைக்கரண்டி
10. எண்ணெய் - 1 மேசைக்கரண்டி
11. பட்டை - சிறிய துண்டு
12. கிராம்பு - 4 எண்ணம்
13. பிரிஞ்சி இலை - 1 எண்ணம்
14. ஏலக்காய் - 2 எண்ணம்
15. முந்திரிப்பருப்பு - 5 எண்ணம்
16. இஞ்சிப் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
1. வெங்காயத்தை நீளவாக்கில் அரிந்து வைத்துக் கொள்ளவும்.
2. பச்சை மிளகாயைக் கீறி வைக்கவும். கேரட்டைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. பாஸ்மதி அரிசியைக் கழுவி 15 நிமிடம் ஊற வைக்கவும்.
4. ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் 3 மேசைக்கரண்டி நெய், 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி நன்றாகச் சூடானதும், பட்டை, கிராம்பு, ஏலக்காய், பிரிஞ்சி இலை, முந்திரிப்பருப்பு போட்டு நறுக்கி வைத்துள்ள வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு புதினா இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து நன்றாக வதக்கவும்.
5. இவை எல்லாம் நன்றாக வதங்கியதும் ஒரு கப் அரிசிக்கு ஒன்றரை கப் தண்ணீர் என்ற விகிதத்தில் நீர் சேர்த்து தேவையான அளவு உப்பையும் சேர்த்துக் கொதிக்க விட்டு, ஒரு கொதி வந்ததும் பொடியாக நறுக்கி வைத்துள்ள கேரட், பட்டாணி, மல்லித்தழை, மீதியுள்ள புதினா சேர்த்து மேலே ஒரு கரண்டி நெய் விட்டு நன்றாக கலந்து மூடி போட்டு வேகவிடவும்.
6. இரண்டு, மூன்று முறை அரிசி உடையாமல் நிதானமாகக் கலந்து விட்டு நீர் சிறிது வற்றியதும் அடுப்பைக் குறைந்த நெருப்பில் வைத்து மூடி போட்டு 15 நிமிடங்கள் வேக விடவும்.
7. பதினைந்து நிமிடம் கழித்து அடுப்பை அணைத்துவிட்டு 5 நிமிடம் கழித்து மூடியை திறந்தால் கம கம வாசனையுடன் பொல பொலவென சூப்பர் சுவையுடன் நெய் சாதம் பரிமாற தயார்.<./div>
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.