வரகு தயிர் சாதம்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. வரகு அரிசி - 4 கப்
2. தயிர் - 4 கப்
3. பால் - 100 மி.லி
4. பெருங்காயத்தூள் - 1 தேக்கரண்டி
5. கேரட் (துருவியது) - 1 கப்
6. பச்சை மிளகாய் - 7 எண்ணம்
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. உளுந்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
9. இஞ்சி - சிறிது
10. கறிவேப்பிலை - சிறிது
11. நல்லெண்ணெய் - தேவையான அளவு
12. உப்பு - தேவையான அளவு
செய்முறை :
1. வரகு அரிசியைக் கழுவி வேகவைக்கவும்.
2. சாதம் சூடாக இருக்கும் போது, தயிர் மற்றும் பால் ஊற்றி, உப்பு சேர்த்துக் கிளறவும்.
3. கடாயில் எண்ணெய் ஊற்றிக் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும்.
4. கிளறி வைத்திருக்கும் தயிர் சாதத்துடன் தாளிசத்தையும், நறுக்கிய மிளகாய், துருவிய கேரட் சேர்த்துக் கிளறிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.