சாமை சாம்பார் சாதம்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. சாமை அரிசி - 4 கப்
2. பீன்ஸ் - 150 கிராம்
3. காரட் - 100 கிராம்
4. கத்திரிக்காய் - 50 கிராம்
5. தக்காளி - 50 கிராம்
6. மிளகாய் வற்றல் - 8 எண்ணம்
7. துவரம் பருப்பு - 1 கப்
8. உளுந்தம் பருப்பு - 1 கப்
9. சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
11. முருங்கைக்காய் - 2 எண்ணம்
12. கடுகு - 1/2 தேக்கரண்டி
13. மஞ்சள்தூள் - சிறிது
14. மல்லித்தழை - சிறிது
15. கறிவேப்பிலை - சிறிது
16. உப்பு - தேவையான அளவு
17. சாம்பார் பொடி - 2 தேக்கரண்டி
18. நெய் - சிறிது
19. சீரகத்தூள் - 1/2 தேக்கரண்டி
20. பெருங்காயத்தூள் - சிறிது
21. நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை :
1. சாமை அரிசியைத் தண்ணீரில் கழுவி ஊறவைக்கவும்.
2. துவரம் பருப்பை மஞ்சள்தூள் சேர்த்துக் குழைய வேகவிடவும்.
3. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
4. அதனுடன் சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கி, காய்கறிகளை நறுக்கிச் சேர்க்கவும்.
5. காய்கள் நன்கு வெந்ததும், வேகவைத்த பருப்பைச் சேர்த்துச் சிறிது புளிக் கரைசலை விட்டுக் கொதிக்கவிடவும்.
6. ஊறவைத்த சாமை அரிசியைக் கொட்டி உப்பு சேர்த்துக் கிளறவும்.
7. ஏழரை கப் தண்ணீர் சேர்த்து பெருங்காயத்தூள், சாம்பார் பொடி சேர்த்து நன்கு கிளறவும்.
8. அரிசி வெந்ததும், நெய் ஊற்றிக் கிளறிவிடவும்.
9. நறுக்கிய மல்லித்தழை, சீரகத்தூள் தூவிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.