குடமிளகாய் சட்னி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. குடமிளகாய் பெரியது - 1 எண்ணம்
2. சின்ன வெங்காயம் - 100 கிராம்
3. பச்சை மிளகாய் - 10 எண்ணம்
4. தக்காளி சிறியது - 1 எண்ணம்
5. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
6. புளி – எலுமிச்சை அளவு
7. கடுகு - சிறிது
8. சீரகம் - சிறிது
9. வெந்தயம் - சிறிது
10. உளுத்தம்பருப்பு - சிறிது
11. கறிவேப்பிலை - சிறிது
12. நல்லெண்ணெய் – தேவையான அளவு
13. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. குடமிளகாயைச் சிறிதாக வெட்டிக் கொள்ளவும்.
2. சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளியைஒ பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. புளியைத் தண்ணீரில் ஊறவைத்துக் கெட்டியாகக் கரைத்துக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து நல்லெலெண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு சேர்த்துப் பொறிந்ததும், உளுத்தம்பருப்பு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து, அத்துடன் நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
5. அத்துடன் குடமிளகாய், நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
6. சிறிது நேரம் வதக்கிய பின் தக்காளி சேர்த்து, மஞ்சள்தூள், உப்பு போட்டு வதக்கிப் பின்னர் புளிக் கரைசலை சேர்த்து நன்கு வதக்கி இறக்கவும்.
குறிப்பு: உப்புமா, பொங்கல், தயிர் சாதத்திற்கு இந்த சட்னி சுவையாக இருக்கும்.