செட்டிநாடு தக்காளி சட்னி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. தக்காளி - 3 எண்ணம்
2. வெங்காயம் - 3 எண்ணம்
3. பச்சை மிளகாய் - 3 எண்ணம்
4. உளுந்து - 2 தேக்கரண்டி
5. கடலைப் பருப்பு - 2 தேக்கரண்டி
6. கருவேப்பிலை - சிறிது
7. மல்லித் தழை - சிறிது
8. தேங்காய்த் துருவல் - சிறிது
9. எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. தக்காளி, வெங்காயத்தை துண்டுகளாக நறுக்கிவைக்கவும்.
2. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், உளுந்து, கடலைப் பருப்பு, கறிவேப்பிலை,கொத்தமல்லி ஆகியவற்றைப் போட்டு வதக்கவும்.
3. அதில் வெங்காயம், பச்சை மிளகாய், தக்காளி என ஒவ்வொன்றாகச் சேர்த்து வதக்கவும்.
4. தேங்காய்த் துருவலைச் சேர்த்து வதக்கி இறக்கவும்.
5. சூடு ஆறியதும் சிறிது மொறுமொறுப்பாக அரைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.