கோஸ் சட்னி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கோஸ் - 1/4 கிலோ
2. எண்ணெய் - 4 மேசைக் கரண்டி
3. வெந்தயம் - 2 மேசைக் கரண்டி
4. கடுகு - 1 மேசைக்கரண்டி
5. புளிக் கரைசல் - 1/2 கிண்ணம்
6. பெரிய வெங்காயம் - 2 எண்ணம்
7. பெருங்காயத் தூள் - 1/4 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள்- 1/2 தேக்கரண்டி
9. பூண்டு - 3 பற்கள்
10. மல்லித்தழை - சிறிது
11. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
2. வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுக் காய்ந்தவுடன் கோஸை பொடியாக நறுக்கி வதக்கித் தனியாக எடுத்து வைக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், வெந்தயம், கடுகு, பெருங்காயம், பூண்டு சேர்த்து நன்கு வதக்கவும்.
4. வதக்கிய பொருட்களுடன் உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
5. பின்னர் கோஸ், புளித் தண்ணீர் சேர்த்து நன்கு கலக்கி மேலே மல்லித்தழையைத் தூவி பரிமாறவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.