மாங்காய் சட்னி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. மாங்காய் – 1 எண்ணம் (சிறியது)
2. தேங்காய் – 1/2 மூடி
3. பச்சை மிளகாய் – 4 எண்ணம்
4. இஞ்சி – சிறிது
5. கடுகு உளுந்து - 1/4 தேக்கரண்டி
6. உப்பு – தேவையான அளவு
7. எண்ணெய் – தேவையான அளவு
8. கறிவேப்பிலை – சிறிது.
செய்முறை:
1. மாங்காய் மற்றும் தேங்காயைச் சிறிய துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
2. நறுக்கிய தேங்காய், மாங்காய், இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்புச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்துக் கொள்ளவும்.
4. தாளிசப்பொருட்களை அரைத்து வைத்த விழுதுடன் சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.