பாம்பே சட்னி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பெரிய வெங்காயம் - 2 எண்ணம்
2. தக்காளி -1 எண்ணம்
3. உருளைக்கிழங்கு - 2 எண்ணம்
4. பச்சைமிளகாய் - 6 எண்ணம்
5. கடலை பருப்பு - 1 தேக்கரண்டி
6. கடலை மாவு - 1 தேக்கரண்டி
7. மஞ்சள் தூள் - சிறிதளவு
8. கடுகு - 1/2 தேக்கரண்டி
9. உளுந்து - 1/2 தேக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு
11. மல்லித்தழை - சிறிது
செய்முறை:
1. முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்துச் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
2. வெங்காயம், தக்காளி இவற்றை மெலிதாக நீளவாக்கில் நறுக்கவும்.
3. பச்சைமிளகாயை நீளவாக்கில் கீறிக் கொள்ளவும்.
4. ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுந்து போட்டுத் தாளித்து, உடன் கடலைப் பருப்பைச் சேர்த்து வதக்கவும்.
5. அதனுடன் பச்சை மிளகாயும் சேர்த்து வதக்கவும்.
6. பிறகு அத்துடன் வெங்காயம் சேர்த்து வதக்கி உடன் தக்காளியும் சேர்த்து வதக்கி மூடி வைக்கவும்.
7. சிறிது நேரத்திற்குப் பிறகு உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துக் கிளறி நறுக்கி வைத்திருக்கும் உருளைக்கிழங்கைச் சேர்த்துக் கிளறவும்.
8. சிறிதளவு தண்ணீர் சேர்த்துக் கிளறி பாத்திரத்தை மூடவும்.
9. அது ஒரு கொதி வந்தவுடன் கடலை மாவைத் தண்ணீரில் கலந்து, உருளைக்கிழங்கு கலவையில் ஊற்றி நன்றாக கிளறவும்.
10. சிறிது நேரத்துக்குப் பின் கிளறிவிட்டுக் மல்லித்தழை தூவிக் கிளறவும்.
குறிப்பு: சப்பாத்தி, பூரி, தோசை, இட்லி இவற்றுடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.