வெங்காயச்சட்னி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. வெங்காயம் - 3 எண்ணம்
2. மிளகாய் வற்றல் - 8 எண்ணம்
3. பொட்டுக்கடலை - 1 மேசைக்கரண்டி
4. புளிச்சாறு - 1 மேசைக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
6. வெல்லம் - 1 மேசைக்கரண்டி (விரும்பினால்)
7. எண்ணெய் - தேபையான அளவு
செய்முறை:
11. ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மிளகாய் வற்றல் சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி, பின் வெங்காயத்தைச் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும்.
2. பின்னர் அதில் பொட்டுக்கடலை, உப்பு, புளிச்சாறு மற்றும் வெல்லம் சேர்த்து ஐந்து நிமிடம் மிதமான தீயில் வதக்கவும்.
3. பின்பு அதனை இறக்கிக் குளிர வைத்து, பின் மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்துப் பின்னர் பயன்படுத்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.