வெங்காயச் சட்னி
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. வெங்காயம் (பல்லாரி) - 1 எண்ணம்
2. கடலைப்பருப்பு - 4 தேக்கரண்டி
3. மிளகாய் வற்றல் - 4 எண்ணம்
4. கடுகு - 1/4 தேக்கரண்டி
5. கறிவேப்பிலை - சிறிதளவு
6. எண்ணெய் - தேவையான அளவு
7. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கடாயில் எண்ணெய் விட்டு கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல் சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும்.
2. அதன் பிறகு, நறுக்கிய வெங்காயத்தை வதக்கவும்.
3. வதக்கிய வெங்காயத்தை ஆற வைத்து, பின்னர் வறுத்து எடுத்து வைத்த கடலைப்பருப்பு, மிளகாய் வற்றல், உப்பு சேர்த்து மிக்சியில் விழுதாக அரைக்கவும்.
4. கடாயில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து, தாளிசத்தை அரைத்து வைத்த சட்னியில் கலந்து பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.