நிலக்கடலை சட்னி
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. நிலக்கடலை – 250 கிராம்
2. பூண்டு – 10 பல்
3. புளி – சிறிது
4. மிளகாய் - 3 எண்ணம்
5. சின்ன வெங்காயம் – 3 எண்ணம்
6. உப்பு – சிறிது
7. எண்ணெய் – 1 மேசைக்கரண்டி
8. கடுகு உளுந்து – 1/2 தேக்கரண்டி
9. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. நிலக்கடலையை வறுத்துத் தோலை நீக்கிக் கொள்ளவும்.
2. தோல் நீக்கிய கடலை மற்றும் மேலே கொடுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களையும் நீர் சேர்த்து சட்னிப் பதத்தில் அரைத்துக் கொள்ளவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு உளுந்து, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
4. தாளிசத்தைச் சட்னியுடன் சேர்த்துப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.