கொண்டைக்கடலை சென்னா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கொண்டைக்கடலை - 300 கிராம் (தயாரிக்க விரும்புவதற்கு 10 மணி நேரத்திற்கு முன்பு தண்ணீரில் ஊற வைக்கவும்)
2. தக்காளி -100 கிராம்
3. வெங்காயம் - 50 கிராம்
4. பூண்டு - 5 பல்
5. இலவங்கப் பட்டை - 10 கிராம்
6. உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
7. இஞ்சி, சீரகம்,மிளகு, மல்லித்தூள்- சிறிது
செய்முறை:
1. ஊற வைத்த கொண்டைக்கடலையை வேக வைத்துத் தனியாக வைக்கவும்.
2. இஞ்சி, பூண்டு, சீரகம், மிளகு, மல்லித்தூள், இலவங்கப்பட்டை போன்றவற்றை வாணலியில் இலேசாக வறுத்து அரைத்து வைக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தக்காளியைப் பொடியாக நறுக்கிப் போட்டு வதக்கவும்.
4. அரைத்து வைத்த பொடியைத் தக்காளியுடன் சேர்த்து வதக்கவும்.
5. வேகவைத்த கொண்டைக்கடலையை தக்காளி, மசாலா கலவையில் சேர்த்துக் கிளறவும்.
6. நன்கு வேகவும் இறக்கி கொத்தமல்லித்தழைகளை மேலாகப் போட்டு இறக்கி வைக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.