வெங்காயச் சட்னி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பல்லாரி வெங்காயம் - 250 கிராம்
2. மிளகாய் - 20 கிராம்
3. பொரிகடலை மாவு - 2 மேஜைக் கரண்டி
4. தேங்காய் - அரை மூடி
5. நல்லெண்ணெய் - தேவையான அளவு
6. கடுகு & உளுந்து - சிறிது
7. சிறிய வெங்காயம் - சிறிது
8. உப்பு, மஞ்சள்தூள் - தேவையான அளவு
9. கறிமசால் பட்டை - சிறிது
10. சோம்பு - 1/2 தேக்கரண்டி
செய்முறை:
1. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்தவுடன் கடுகு, உளுந்து மற்றும் அனைத்து வாசனைப் பொருட்களையும் போடவும்.
2. கடுகு வெடித்ததும் நீளமாக நறுக்கிய பல்லாரி வெங்காயம், கீறிய மிளகாய், கருவேப்பிலை போட்டு நன்றாக வதக்கவும்.
3. நன்றாக வதக்கியதும் சிறிது தண்ணீர் சேர்த்து பல்லாரி வெங்காயத்தை வேகவிடவும்.
4. தேங்காய்ப்பாலில் பொரிகடலை மாவு கல்ந்து உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வெங்காயத்தில் ஊற்றி சிறிது குழம்பு போல் ஆனவுடன் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.