கருணைக் கிழங்கு மசியல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கருணைக் கிழங்கு - 250 கிராம்
2. புளி - சிறிது
3. இஞ்சி நறுக்கியது - 1 மேசைக்கரண்டி
4. பச்சைமிளகாய் - 3 எண்ணம்
5. சின்ன வெங்காயம் - 100 கிராம்
6. சாம்பார் பொடி - 1 மேசைகரண்டி
7. தக்காளி - 2 எண்ணம்
8. கடுகு - ஒரு மேசைக்கரண்டி
9. கடலை பருப்பு - ஒரு மேசைக்கரண்டி
10. கறிவேப்பில்லை - பத்து இலைகள்
11. கடலெண்ணெய் - 3 மேசைக்கரண்டி
12. மஞ்சள் பொடி - 2 சிட்டிகை
13. மல்லித்தழை - ஒரு கைப்பிடி அளவு
14. உப்பு - தேவையான அளவு
அரைக்க வேண்டிய பொருட்கள்
1. தேங்காய்த் துருவல் - 5 மேசைக்கரண்டி
2. சோம்பு - 1 சிறிய மேசைக்கரண்டி
3. பச்சைமிளகாய் - 2
செய்முறை:
1. கருணைக் கிழங்கை நன்றாக வேகவைத்து மசித்துக் கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, கடலைபருப்பு, மூன்று பச்சை மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளிக்கவும்.
3. பின்னர் வெங்காயம் போட்டு வதக்கவும். அதனுடன் கருணைக் கிழங்கு, தக்காளி போட்டு நன்றாக வதக்கவும்.
4. புளியைக் கரைத்து ஊற்றி, அதனுடன் உப்பு, மஞ்சள் பொடி, சாம்பார் பொடி போட்டு நன்கு கொதிக்க விடவும்.
5. நன்றாக கொதித்தவுடன், அரைக்கக் கொடுத்துள்ள மசாலாக்களை அரைத்து மசியலில் சேர்க்கவும். ஒரு பதினைந்து நிமிடம் கொதித்ததும் கெட்டியாக ஆகும்.
6. கொத்தமல்லி தூவி இறக்கி வைக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.