கருவேப்பிலை துவையல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. மிளகாய் வற்றல் - 10 எண்ணம்
2. கருவேப்பிலை - 1 கொத்து
3. எண்ணெய் - 1 தேக்கரண்டி
4. புளி - 1 நெல்லிக்காய் அளவு
5. பூண்டு - 10 பற்கள்
6. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், மிளகாய் வற்றல், கருவேப்பிலை போட்டு மூன்று நிமிடங்கள் வதக்கி ஆற வைக்கவும்.
2. வதக்கி ஆற வைத்ததை கருவேப்பிலை, புளி, உப்பு சேர்த்து இலேசாக அரைத்து கொள்ளவும்.
3. பின்னர் அதில் பூண்டு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.