பீர்க்கங்காய் துவையல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பீர்க்கங்காய் - 100 கிராம்
2. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
3. உளுத்தம் பருப்பு - 2 மேசைக்கரண்டி
4. பெருங்காயம் - சிறிது
5. புளி - நெல்லிக்காயளவு
6. கடுகு - 1/2 தேக்கரண்டி
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - தேவையான அளவு
9. கறிவேப்பிலை - சிறிது.
செய்முறை:
1. பீர்க்கங்காயைக் கழுவி விட்டுத் தோலுடன் சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பெருங்காயம், உளுத்தம் பருப்பு, மிளகாய், புளி ஆகியவற்றைப் போட்டு சிவக்க வறுத்தெடுக்கவும்.
3. அதே வாணலியில் இன்னும் சிறிது எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பீர்க்கங்காய் துண்டுகளைப் போட்டு, மிதமான நெருப்பில் சில நிமிடங்கள் வதக்கி எடுத்து ஆற விடவும்.
4. வறுத்த மிளகாய், உளுத்தம் பருப்பு, மிளகாய், பெருங்காயம், புளி ஆகியவற்றைப் போட்டு, அத்துடன் உப்பையும் சேர்த்து பொடித்துக் கொள்ளவும்.
5. பின்னர் அதில் வதக்கி வைத்துள்ள பீர்க்கங்காயைப் போட்டு விழுதாக அரைத்தெடுக்கவும்.
6. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்து அரைத்தெடுத்த விழுதில் சேர்க்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.