பிரண்டைத் துவையல்
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. பிரண்டை - 200 கிராம்
2. மிளகாய் வற்றல் - 10 எண்ணம்
3. புளி - சிறிது
4. தேங்காய் - சிறிது
5. கருவேப்பிலை - சிறிது
6. பெருங்காயம் - 1 சிட்டிகை
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. பிரண்டையைச் சுத்தம் செய்து சுடுநீரில் இரண்டு நிமிடம் போட்டு எடுத்துத் தண்ணீரை நன்கு வடிய விடவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் பிரண்டைத் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
3. பிரண்டைத் துண்டுகள் நன்கு வதங்கியதும், அதனுடன் வத்தல், புளி, தேங்காய் அனைத்தையும் சேர்த்து வதக்கவும்.
4. வதக்கிய பொருட்களுடன் உப்பு,பெருங்காயம் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுந்து, கருவேப்பிலை சேர்த்துத் தாளிக்கவும்.
6. தாளிசத்தை அரைத்து வைத்திருக்கும் பிரண்டை விழுதில் சேர்த்துப் பயன்படுத்தலாம்.
குறிப்பு: பிரண்டையை நன்கு வதக்க வேண்டும். இல்லையெனில் நாக்கு அரிப்பு எடுக்க நேரிடலாம்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.