பீர்க்கங்காய் துவையல்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. பீர்க்கங்காய் தோல் - 1/2 கப்
2. தேங்காய்த் துருவல் - 3 மேசைக்கரண்டி
3. கடலைப் பருப்பு - 1 மேசைக்கரண்டி
4. உளுத்தம் பருப்பு - 1மேசைக்கரண்டி
5. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
6. புளி - சிறிது
7. பெருங்காயம் - சிறிது
8. கருவேப்பிலை - சிறிது
9. உப்பு - தேவையான அளவு
10. எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டுப் பீர்க்கங்காய் தோலை வதக்கி எடுத்து வைக்கவும்.
2. அதே வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடலை,பருப்பு, உளுத்தம் பருப்பு, மிளகாய் வற்றல், கருவேப்பிலை, பெருங்காயம் போட்டு வறுக்கவும்.
3. வறுத்ததுடன் தேங்காய்த் துருவல் சேர்த்து லேசாக வதக்கவும்.
4. வதக்கியவற்றை நன்கு ஆற விடவும்.
5. வதக்கிய தோல், வதக்கிய பொருட்கள், உப்பு, தண்ணீர் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.