முடக்கத்தான் துவையல்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. முடக்கத்தான் கீரை-1 கப்
2. மிளகாய் வற்றல் - 8 எண்ணம்
3. நல்லெண்ணெய்-தேவையான அளவு
4. பெருங்காயம்-சிறிது
5. உளுத்தம் பருப்பு-1/2 தேக்கரண்டி
6. கடுகு- 1/2 தேக்கரண்டி
7. புளி-எலுமிச்சை அளவு
8. உப்பு-தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, மிளகாயைப் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும்.
2. அத்துடன் புளியையும், சுத்தம் செய்த கீரையையும்சேர்த்து நன்கு வதக்கி எடுக்கவும்.
3. வதக்கிய அனைத்தையும் சொரசொரப்பாக அரைத்து எடுக்கவும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.