எள்ளுத் துவையல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கருப்பு எள் – 1/2 கப்
2. தேங்காய்த் துருவல் – 1/2 கப்
3. மிளகாய் வற்றல் – 5 எண்ணம்
4. புளி – சிறிய நெல்லிக்காய் அளவு
5. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. எள்ளைச் சுத்தப்படுத்தி வெறும் வாணலியில் வெடிக்கும் வரை வறுக்கவும்.
2. பிறகு அதே வாணலியில் மிளகாய் வற்றல் சேர்த்து துளி எண்ணெய் விட்டு வறுக்கவும்.
3. வறுத்த எள், துருவிய தேங்காய், மிளகாய் வற்றல், உப்பு மற்றும் புளி சேர்த்து விழுதாக அரைக்கவும்.
குறிப்பு: இந்தத் துவையலுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கெட்டியாக அரைத்துச் சூடான சாதத்துடன் நல்லெண்ணெய் விட்டுச் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.