சுண்டைக்காய் வேப்பம் பூ துவையல்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. சுண்டைக்காய் - 20 எண்ணம்
2. வேப்பம் பூ - 1 கைப்பிடி அளவு
3. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
4. புளி - 1 நெல்லிக்காய் அளவு
5. உளுத்தம் பருப்பு - 2 கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
7. இஞ்சி - சிறு துண்டு
8. நல்லெண்ணெய் - 2 கரண்டி.
செய்முறை:
1. சுண்டைக்காயைத் தனியாக எண்ணெய் விட்டு வறுக்கவும்.
2. வேப்பம்பூவைப் பொன்னிறமாக வறுக்கவும்.
3. உளுத்தம் பருப்பைச் சிவக்க வறுத்துக் கொள்ளவும்.
4. இஞ்சியை தோல் சீவி பொடியாக நறுக்கி மிளகாய் வற்றலுடன் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
5. முதலில் உளுத்தம் பருப்பை மிக்ஸியில் போட்டு ஒரு சுற்று சுற்றிய உடன் சுண்டைக்காய், வேப்பம் பூ, மிளகாய் வற்றல், புளி, இஞ்சி எல்லாம் சேர்த்து கெட்டியாக அரைக்கவும்.
6. தேவையான உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.
குறிப்பு:
1. சூடான சாதத்தில் நல்லெண்ணெய் விட்டு இந்தத் துவையலைப் போட்டுச் சாப்பிடலாம்.
2. வயிறு மந்தமாக இருந்தால் இந்தத் துவையல் சாப்பிட்டால் வயிறு சரியாகிவிடும்.
3. பித்தத்திற்கு மிகவும் நல்லது
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.