எலுமிச்சை இலை துவையல்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. நார்த்தங்காய் இலை - 1 கப்
2. எலுமிச்சை இலை - 1 கப்
3. கறிவேப்பிலை - 1/2 கப்
4. மிளகாய் வற்றல் - 10 எண்ணம்
5. ஓமம் - 1 மேசைக்கரண்டி
6. பெருங்காயம் - சிறிது
7. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. எலுமிச்சை இலையையும் நார்த்த இலையையும் நன்றாகக் கழுவி துடைத்து நிழலில் உலர்த்தி எடுக்கவேண்டும்.
2. வெறும் கடாயில் இலைகளை எண்ணைய் விடாமல் வறுக்கவேண்டும்.
3. பிறகு மிளகாய் வற்றல், ஓமம்,பெருங்காயம் மூன்றையும் எண்ணைய் விட்டு வறுக்கவேண்டும்.
4. இலைகள் தவிர மற்றவற்றை உப்புடன் சேர்த்து மிக்ஸியில் பொடி செய்து கடைசியில் இலைகளையும் சேர்த்து அரைக்கவேண்டும்.
குறிப்பு: வெய்யிலுக்குத் தயிர் சாதத்துடன் சேர்த்துச் சாப்பிட ஏற்றது.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.